Skip to main content

கண்ணம்மா 10

“அக்கா நான் நிச்சயமா ஒரு டொக்டரா வந்து உன்ன ஒரு மகாராணி மாதிரி வச்சிருப்பன்! “


”நீ என்ர புள்ளடா என்ர ஒவ்வொரு அசைவும் என்ன சொல்லுதுண்டு எனக்குத் தெரியும்.“

கடந்தகால வார்த்தைகள் குமரேசனின் உள்ளத்தில் கூரிய அம்புகளென பாய்ந்து தொடர் வலிகளை உண்க்கிய வண்ணம் இருந்தன.

மெழுகுதிரி பிறருக்கு இருள் அகற்றி ஒளி கொடுத்து தன்னை அணுஅணுவாய் உருக்குலைப்பது போல தன் அக்காளும் சிறு வயதில் இருந்து தான் அனுபவிக்கவேண்டிய அனைத்து ஆசாபாசங்களையும் புறந்தள்ளி எனக்காக எனது ஆசாபாசங்களுக்காக எனது ஒளிமயமான கௌரவ வாழ்க்கைக்காக தன்னை உருக்குலைத்த்தை எண்ணி எண்ணி விழிகளில் கண்ணீர் குளம் எனத்தேங்காமல் வற்றாத அருவியாக பாய பாய கதறினான் மௌன மொழியில்……பின் தன்னைத்தானே தேற்றியபடி

“ நோ ! இவ்வளவு காலம் நான் எனக்காகவே வாழ்ந்துட்டன்.இனியாவது எனது அக்காவுக்காக வாழணும்.அவங்க கண்ணில இருந்து கண்ணீர பாக்கணும்னா அது புன்னகை மிகுதியால தான் வரணும்”

என்று எண்ணியபடி கதிரையில் அமர்ந்திருந்தான்.

மெல்லத்திறந்த்து கதவு. “டொக்….. டொக்……டொக்….” கதவு திறப்பதையும் வைத்தியரின் சப்பாத்து ஒலியையும் அவதானித்து உடன் எழுந்து

“சார் இப்ப அக்கா எப்பிடி இருக்கிறா!!? என அதிக எதிர்பார்ப்பை மனதில் சுமந்த வண்ணம் கேட்டான்.

“டோன்ற் வொறி. இப்ப அவங்க சுகம் தான்….தலயில பலத்த அடி. சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்குது.அண்ட் மிஸ்டர் குமரேசன் ஷி இஸ் வெறி வீக் நௌ.அவங்கள அதிகமா வேல செய்ய விடாதீங்க. எப்ப டிஸ்சார்ச் பண்ணுறங்கிறதப்பற்றி நான் அப்புறம் சொல்லுறன். எனிவே நௌ யு கான் சி யோ சிஸ்டர். பதிலளித்தார் வைத்தியர்.

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என குமரேசனின் உள்ளத்தில் னெபு சந்தோசம் ஊற்றெடுக்க கதவைத்திறந்து விரைந்தான் கண்ணம்மாவிடம்……

-----முற்றும்-----

Comments

Popular posts from this blog

Visual Basic - Hello World (பார்வை - 2)

அனைவருக்கும் வணக்கம்…. சென்ற பதிப்பில் Visual Basic இல் நிரலாக்க குறியீடுகள் (Programming Codings) எழுதும் பகுதியில் இருந்து இயங்குநிலைக்கு எப்படி கொண்டு செல்வது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பில் அவசரமாக எப்படி நிரலாக்க குறியீடுகள் எழுதுவது என்று பார்க்க முன்னர் சில பகுதிகளை குறிப்புகளாக நோக்கிவிட்டு Programme எழுத போகலாம். பொதுவாக எல்லா மொழிகளுக்கும் பலதரப்பட்ட வரையறைகள் இருக்கின்றன. உதாரணமாக…. நாம் நாளை பாடசாலை சென்றேன். இந்த வசனத்தில் ஏகப்பட்ட பிழைகள். இப்படி ஒருவர் கூறும் பட்சத்தில் அவர் என்ன கூறவருகிறார் என்று எங்களால் இனங்காணமுடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதே பிரச்சினை தான் இந்த நிரலாக்க மொழி சூழலிலும் காணப்படுகின்றது. கணினி என்று நோக்கும் போது அங்கும் அதனால் விளங்க கூடிய வகையில் நாம் கூறுபவை தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மொழி பயிலும் போதும் ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் இருப்பது போன்று காணப்படும் மாயை காலம் செல்ல செல்ல இடர்பாடுகள் குறைந்து செல்வது போன்ற தோற்றப்பாட்டை கொண்டு காணப்படும். இங்கும் நாம் கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதனுடன் வரையறைகளுக்கு உட்பட்ட...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

யார் ? இவர்கள் 05

பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. அப்போது பறக்கும் தட்டுகள் வானில் பறந்தது உண்மைதான் என்று தகவல் வெளியானது. இங்கு பெறப்பட்ட அவ்வுலோகமானது மிகவும் நிறைகுறைந்ததாகவும் ஆனால் மிகவும் உறுதி கூடியதாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுலோக இயல்பு பூமியில் உள்ள உலோகங்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனாலும் உடனடியாக ஏற்பட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதாக அரசு கூறிய கருத்து “ விமானப்படையினர் தட்பவெப்பநிலை மாற்றங்களை அறிய அனுப்பிய வானிலை ஆய்வு பலூன் தான் தரையில் வீழ்ந்து நொருங்கியது ’’ மேற்கூறப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளு...