Skip to main content

Visual Basic - Use of Command buttons and Text Box (பார்வை - 3)



அனைவருக்கும் இனிய வணக்கங்கள்

சென்ற பதிப்பில் "Hello World" என்ற வாசகத்தை எவ்வாறு Print பண்ணுவது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பின் மூலம் Text Box இனையும் Command Buttons சிலவற்றினை கொண்டு தரவுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று பார்க்கலாம்.

அதற்கு முன்னர் Visual Basic IDE(Integrated Development Environment) இல் சில பயிற்சிகளை நாம் செய்து கொண்டிருக்கும் போது தவறுதலாக அங்கு காணப்படும் Tool Box , Properties Window , Form Layout , Properties Window , Project Explorer.. இவற்றில் ஏதாவது ஒன்று Close பண்ணுப்படலாம். அவற்றினை மீண்டும் தளத்திற்கு கொண்டுவருவதற்கு  
Menu --> View என்று செல்வதன் அவற்றை மீண்டும் பெற்றிடலாம். அத்துடன் அவற்றை இலகுவான வழியில்(Short cut) மீள கொண்டு வருவதற்கான வழியும் கொடுக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக Properties Window இனை மீண்டும் பெற்றுக்கொள்ள "F4" அழுத்தினாலே போதும்.

இன்றைய பதிப்பின் மூலம் நாம் அறியவேண்டியது இது தான்....

அதாவது எமது பெயரினை எழுதி அவற்றினை கீழே காட்டப்பட்டுள்ள இரு Command Buttons மூலமாக எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று பார்க்கலாம். 
அவற்றிற்கான நிரலாக்க குறியீடுகள் எழுதும் முன்னர் Form இனை மீண்டும் ஒருமுறை பாருங்கள். 

அங்கு Form இற்கு Color , Properties Window இல் BackColor மூலமாக கொடுக்கப்பட்டது.

First Name சிறிய பரப்பையும் Last Name பாரிய அளவிலான பரப்பையும் கொண்டு காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்துவது Properties Window இல் காணப்படும் AutoSize ஆகும். FirstName இற்கு True ஆகவும் Last Name இற்கு False ஆகவும் இடப்பட்டுள்ளது. 

மற்றும் Text Box இனை Form இல் உருவாக்கியவுடன் குறித்த textbox இனை click பண்ணியபின்னர் Properties Window இல் Text என்ற பகுதியில் காணப்படுவதை நீக்கிவிடுங்கள். 

(மேலே கொடுக்கப்பட்ட மாற்றங்கள் இங்கே விளக்குவதற்கு இலகுவாக இருப்பதற்காகவே நான் கொடுத்துள்ளேன். நீங்கள் பயிற்சி செய்யும் போது உங்களின் சிந்தைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து அழகூட்டுவது உங்கள் பொறுப்பு)

இன்றைய பகுதியில் நாம் பார்த்த மேலதிக விடயங்கள் இவ்வளவு தான். எனி ஒவ்வொன்றிற்குமான நிரலாக்க குறியீடுகள் பற்றி பார்க்கலாம். 

முதலில் இந்த Program ஆரம்பிக்கும் பொழுது , ஒரு தகவலை கொடுக்கலாம். அதற்கு Form இல் Double Click பண்ணும்போது Coding எழுதும் பக்கம் பெறப்படும். அதில் ,

Private Sub Form_Load()
**********
End Sub
"*" புள்ளிகள் இடப்பட்ட பகுதியினுள் தான் நாம் விரும்புகிற நிரலாக்க குறியீடுகளை எழுத வேண்டும். அத்துடன் எழுத முற்படும் போது Ctrl+space இரண்டையும் சேர்த்து அழுத்தவேண்டும். அழுத்தும்போது வரும் Window வில் கீழ்கண்டவாறு MsgBox என்பதை தெரிவுசெய்து பின்னர் ஏனையவற்றை தட்டச்சு செய்யுங்கள்.

Private Sub Form_Load()
MsgBox "Welcome to VB Projects!!!"
End Sub

அடுத்தது "Ok" Button இனை Click பண்ணியவுடன் நாம் தட்டச்சு செய்த பெயர்கள் பெறப்பட வேண்டும். (Message Box ஊடாக).  இதற்கு "Ok" Button இனை Double Click பண்ணியவுடன் வரும் Window வில் 
கீழ்க்கண்டவாறு எழுதுங்கள்...
Private Sub Command1_Click()
MsgBox Text1.Text + " " + Text2.Text, vbInformation + vbOKOnly, "VB Projects"
End Sub

கடைசியாக Cancel Button இற்கு ,

Private Sub Command3_Click()

Dim x As Integer
x = MsgBox("Are You sure want to Cancel", vbYesNo + vbCritical, "VB Projects")
  If x = vbYes Then
          Text1.Text = ""
          Text2.Text = ""
Else
 If x = vbNo Then
         Set Form = Nothing
End If
End If

End Sub

இவற்றை எழுதி Run பண்ணி பாருங்கள். இங்கு பயன்படுத்தப்பட்ட நிரல்குறியீடுகளை பயன்படுத்தி வேறு வகையில் சில Programme களை செய்து பாருங்கள். சந்தேகங்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. 
Run பண்ணும் பொழுது நான் பெற்ற சில கட்டங்கள் கீழே...
                                                         

















பார்வைகள் தொடரும்.....



Comments

  1. Hai... nice to see you effort in teaching visual basic... Go ahead ...

    and i have a doubt...

    i have written the codes for "OK" button as u mentioned. then i checked it. no errors. after that when i try to write codes for the "Cancel" button, it couldn't accept to write... whenever i click the page, i could only hear a sound... nothing else... what shall i do for that?

    ReplyDelete
  2. If you are still, in the running state, you may feel the same... (just check whether you clicked the stop button or not).

    otherwise it may be some problems with the pc, not with the visual basic.

    ReplyDelete
  3. Thanks kohulraj....
    i had that mistake which u mentioned... thanks again...

    ReplyDelete
  4. தங்களின் வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றிகள் சகோதரி....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

இறந்த காலத்தை அடைவோமா? ( யார் ? இவர்கள் 11 )

இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம். சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம். ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம். இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவா...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...