Skip to main content

சொற்கள் வடிவமைப்பு (பார்வை - 05)

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்...

கடந்த பதிப்பின் இறுதியில் அடுத்த பதிவாக Check Box மற்றும் Option Button போன்றவற்றின் பயன்பாடுகளை பார்க்கலாம் என குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அவற்றினை கொண்டு பயிற்சிகளை செய்யும் முன்னர் மேலும் அடிப்படை அறிவினை இங்கு குறிப்பிடலாம் என எண்ணுகிறேன். இன்னும் ஓரிரு பதிவுகளின் பின்னர் Check Box மற்றும் Option Button இனை நோக்குதல் சாலப்பொருத்தமாக இருக்கும்...

அந்த வகையில் இன்றைய பதிப்பின் ஊடாக குறிப்பிட்ட சொல்லினை தட்டச்சு செய்தபின்னர் அவற்றினை வடிவமைக்கும் விதங்களை பார்க்கலாம். அதாவது Bold, Italic, Underline மற்றும் Font Size.

இவை அடங்கிய ஒரு முறைமையினை இங்கு இணைத்துள்ளேன்...



அது இயங்கும் பொழுதான சில கட்டங்களும் கீழே காட்டப்பட்டுள்ளன...




















மேலே கொடுக்கப்பட்டுள்ள TextBox இல் விரும்பிய சொற்களை பதிவு செய்து கீழுள்ள Buttons இளை அழுத்திப்பார்த்து மாற்றங்களை அவதானியுங்கள்.
அத்துடன் FontSize இனை Button type இல்லாமல் விரும்பிய அளவினை கொடுப்பதற்கு தான் கீழே சிறியதொரு TextBox கொடுக்கப்பட்டுள்ளது.
அவற்றில் விரும்பிய இலக்கத்திளை தட்டச்சு செய்வதன் ஊடாக அதற்குரிய அளவில் குறித்த சொற்கள் பெறப்படும். Codings எழுதும் போது வேறு சிலவற்றையும் முயற்சி செய்து பாருங்கள்.

Coding எழுதும் வேளையில் பலதடவைகள் "Text1."
என்று எழுதப்பட்டிருக்கிறது. இவ்வாறு தட்டச்சு செய்யும்போது “சுயாதீனமாக வரும்” அட்டவணையில் மேலதிகமாக காணப்படக்கூடிய அங்கங்களையும் (Bold, Italic, Underline,........) முயற்சிசெய்து பாருங்கள்.


மீண்டும் சந்திக்கலாம்...

பார்வைகள் தொடரும்....



Comments

Popular posts from this blog

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...