சரி இனி எவ்வாறு புகைப்பிடிப்பதை தடை செய்வதென நோக்குவோம். புகைத்தலைத் தடை செய்வது தொடர்பாக இந்திய ஆங்கிலப் பத்திரிகையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு பகுதியின் தமிழாக்கத்தை கீழே காணலாம்.
”புகைத்தலை விலத்தும் செயற்பாட்டில் ஆலோசனை வழங்கல் 01ம் மாதம், 03ம் மாதம், 06ம் மாதம் ,1 வருடத்திலும் மேற்கொள்ளப்படும். அவர்களின் முறைப்பாட்டை மதிப்பளித்து கேட்க வேண்டும். அவர்களிடம் நெருக்குவாரம், நோ, விரக்தி, மனத்திடமின்மை காணப்படும். காலம் கடந்தாலும் காரியமில்லை நிற்பாட்டினாலே போதும் என்பதை இலகுவாகவும் விளங்கக்கூடிய தன்மையிலும் புரிய வைக்கவேண்டும். புகைத்தலை விலத்தினால் 48 மணித்தியாலங்களில் பெரும்பாலான காபன் மொனோசைட்டுக்கள், நிக்கோட்டின் இல்லாது போகும். விலத்தல் அறிகுறிகள் முதற் கிழமையில் அதிகமாக இருக்கும். 3 - 4 கிழமையில் முற்றாக இல்லாது போய்விடும்"
புகைத்தல் பழக்கத்தை ஆரம்பிப்பது மிக இலகு எனவும் அப்பழக்கத்தை பழக்கப்படுத்திய பின் அதனை கைவிடுவது மிகமிக கடினமாகும் எனவும் அனுபவப்பட்டவர்கள் வாயிலாக இன்று அறியக்கூடியதாக உள்ளது. இதனை ஒரு சான்றார்,
”கடிது கடிது புகைத்தல் துறத்தல் கடிது - மிகக்
கடிது துறத்தல் எண்ணல்” எனக்கூறியுள்ளார்.
மேலும் மதுபானம் பற்றியும் அதன் பாதிப்பு பற்றியும் நோக்குவோம்.
தொடரும்..........................
Comments
Post a Comment