உலகில் மொத்தம் 110 கோடி பேர் புகையிலை பாவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் 80 கோடி பேர் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலும் 30 கோடி பேர் அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் இருக்கிறார்களாம். அதுமட்டுமல்லாது ஒரு நிமிடத்தில் சுமார் 6 பேர் வரை புகைத்தலால் உயிர் இழக்கிறார்கள் என 2004ம் ஆண்டின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைப்பிடிப்பதன் மூலம் புகைப்பிடிப்பவர்கள் இதயநாளம் சார்ந்த நோய்களால் அவதிப்படுவதாகவும் இது கைத்தொழில் நாடுகளில் வாழும் 10 இலட்சம் பேருக்கும் அபிவிருத்தியடைந்து வரும்நாடுகளில் வாழும் 67000ம் பேருக்கும் உள்ளது எனவும் மேற்படி ஆய்வுகள் எடுத்து இயம்புகின்றன. மேலும் சுவாசப்பை அழற்சி, இதயபலவீனம், மாரடைப்பு, சுவாசப்பைப்புற்றுநோய், மார்புச்சளிநோய், சுவாசப்பாதைப்புற்றுநோய், கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படல், வாய்ப்புற்றுநோய், களப்புற்றுநோய், இரப்பைப்புண், சிறுநீர்ப்பைப்புற்றுநோய் போன்ற பல நோய்கள் புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கும் ஏற்படுகிறது. புகையிலையில் காணப்படும் 4000 வகையிலான இரசாயனப் பதார்த்தங்களின் முலம் 60 வகையான
புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. முக்கியமாக புகையிலையில் காணப்படும் நிகோட்டின், காபன்மொனோசைட்டு, மார்ச்சுவாயு, கொலிடின் அமோனியா, பைறோடின், காபோலிக்அசிட், பேர்பராட்பெண்சோபைடின் போன்ற நச்சுப்பதார்த்தங்களுள் பெண்சோபைடின் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது. 2000ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி சர்வதேச ரீதியாக 50 இலட்சம் பேர் புகைத்தலால் அவர்களுடைய உயிரை நீத்துள்ளார்கள்.
தொடரும்.......................
Comments
Post a Comment