இன்றைய நவநாகரிக உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களில் பல் பல்வேறு போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதை காணமுடிகின்றது. இதனால் சமூக அந்தஸ்து உயர்வதாகவும், இன்பமாக இருக்கலாம் எனவும் எண்ணுகிறார்கள். உடல்ரீதியாக, உள ரீதியாக ஒழுக்கரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினது வாழ்க்கையை சீரழித்து சின்னாபின்னமாக்கக்கூடிய தீய பழக்கத்தை உருவாக்கும் பொருளாக போதைப்பொருள் காணப்படுகிறது.மனிதனது மனோநிலை , உணர்வாற்றல், சுயநினைவு என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தவென முறைதவறி பாவிக்கப்படும் இரசாயனப்பதார்த்தங்கள் போதைப்பொருட்கள் ஆகின்றன. கெரோயின், கஞ்சா, அபின், மோபின், கொகெயின், L.S.தூக்கமாத்திரைகள் , மதுபானம் , புகையிலை போன்றன போதைப்பொருட்களில் சிலவாகும். இப்போதைப்பழக்கம் எமது சமூக கலாசாரத்தில் மேலைத்தேய ஆட்சியின் தாக்கத்தாலேயே ஏற்பட்டதை வரலாற்று சுவடுகளில் அடிவைத்துப்பார்பதன் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி போல அறிந்திடலாம்.
மரியானா என்பது ஒருவகை செடி. இந்தச்செடிகளின் இலைகளையும், மலர்களையும் வெட்டி காயவைத்து சிகரெட்டில் புகையிலைக்குப்பதிலாக நிரப்பி புகைத்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அதனுடைய பட்டையில் இருந்து கசியும் பசை மரியானா என்ற பெயரில் வழங்கும் ஒரு போதைமருந்தாக காணப்படுகின்றது. இதை அக்காலகட்டத்திலிருந்து சீனாவிலும் இந்தியாவிலும் கடவுள் பிரசாதமெனக்கருதி உபயோகித்து வந்தனர். க்ளோக்கோமா என்னும் கண்நோய்க்கு மருத்துவர்கள் இதனை மருந்தாக பயன்படுத்தினர்.மரியானாவிலிருந்து கெசீன் ,காங்க் ,கஞ்சா ,சராஸ், க்றாஸ் போன்ற பல வகையான போதைப்பொருட்கள் தயாராகின்றன. கொக்கோ இலையில் இருந்து மயக்க மருந்து தயாரித்து வந்தனர். "கொகெய்ன்" என்ற பெயரில் இந்த போதை மருந்து மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி உணர்விழக்கச் செய்கிறது. அபின் என்பது இன்னொரு வகையான பசையாகும். மேலும் 1981ம் ஆண்டு இருமலுக்கான மருந்தை கண்டுபிடிப்பதில் ஈடுபட்ட வைத்தியர் ஒருவர் கெரோயின் என்ற போதைப்பொருளை கண்டுபிடித்தார். "BROWN SUGAR "என்பது கலப்படமான கெரோயினை குறிக்கிறதாம்.
தொடரும்..............................
Comments
Post a Comment