இன்று 60 வகையான கொடூர நோய்களுக்கு மதுபானமே காரணியாக காணப்படுகிறது. மொத்த நோய்களில் மதுபானத்தின் மூலமாக ஏற்படும் நோய் வீதம் 4 ஆக உள்ளது. மதுபானம் அருந்துபவர்கள் தம்மை அறியாமலே பல்வேறு விபத்துக்களை உண்டாக்குகிறார்கள். குடித்துவிட்டு வாகனத்தை வேகமாக ஓட்டுவதால் சாலை விபத்துக்களில் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. இதய நோய்கள், கல்லீரல் பாதிப்பு, பக்கவாதம், வாய் - கல்லீரல் - மற்றும் மார்பு சார்ந்த புற்றுநோய்கள் போன்றவை மதுபானம் பருகுவதாலேயே ஏற்படுகின்றது. இவ்வாறு போதைப்பொருட்களை நுகர்வோர் மீண்டும் மீண்டும் நுகர ஆசை கொண்டு திருட பிச்சை எடுக்க கொலை - கொள்ளை போன்ற செயல்களை செய்யக்கூட தயங்காமல் இருப்பார்கள். இவ்வாறு போதைப்பொருட்களுக்கு இலக்காவதன் மூலம் அற்புத கலைத்திறன், அனுபவ அறிவு, புத்திசாலித்தனம், சுயகௌரவம், பாசப்பிணைப்பு, நம்பிக்கைகள் என அனைத்தையும் இழந்துவிடுகிறார்கள்.
இதன்போக்கை மாற்ற அதாவது போதைப்பொருள் பாவனையைத்தடுக்க அரசாங்கம் மற்றும் சமூக நலன்புரி சங்கங்கள் ஒன்றிணைந்து பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அரசு இவ்வாறான சிலவகையான போதைப்பொருட்களை வழங்குவதன் நோக்கமே அவ்வாறு வழங்குவதன் மூலம் முடியுமான அளவுக்கு வரி அறவிடலாம் என்பதாகும். ஆனால் இதை விட போதைப்பொருட்களை பாவிப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கவென மேற்கொள்ளப்படும் செலவுகள் அதிகமாக உள்ளன.
சகல பௌதிக வளங்களையும் பயன்பாட்டு வளங்களாக மாற்றக்கூடிய தன்மை மனித வளத்திடமே காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது போதைப்பொருட்களின் பிடியில் சிக்கி பல இளைஞர்கள் மாண்டு போவதால் குறித்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை சீர்கெடுகிறது. ஆதலால் அரசாங்கம் இவ்வாறான ஆட்கொல்லி போதைப்பொருட்களை சமூகத்தில் மக்களின் கைகளில் சேர அனுமதிக்கக்கூடாது. இதன் பாதிப்புகளையும் மக்களுக்கு அறிவு புகட்டி மக்களை பாதுகாக் வேண்டிய கடமையை அரசு செவ்வனே நிறைவேற்றவேண்டும்.
மனக்கட்டுப்பாடு இருந்தால் சூழ்நிலை எங்ஙனம் மோசமாக இருப்பினும் மனக்கட்டுப்பாடு கொண்டவர்களை குடிகாரர்களாக மாற்றமுடியாது.
எனவே மனக்கட்டுப்பாட்டுடன் போதைப்பொருள் பாவனையை வெறுப்போம்.\முற்றும்!!!
Comments
Post a Comment