மதுபானம் இயற்கையில் உண்டாகும் ஒரு திரவம் அன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால் உண்டாவதாகும். கோதுமை, சோளம், ஒட்ஸ், பார்லி, அரிசி, திராட்சை போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவை மற்றைய பதார்த்தங்கள் போலன்றி உடலில் காணப்படும் வெண்குருதிசிறுதுணிக்கைகளை அழிக்கிறது. மேலும் நுகரும் மதுபானத்தில் 20 சதவீதம் இரத்தத்தில் நேரடியாக கலந்து உடல் உறுப்பு பலவற்றையும் பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றது. ஈரல், மூளை நரம்புகள், பாலின உறுப்புகள், சிறுநீரகங்கள், நுரையீரல்கள், இரப்பை, இரத்தக்குழாய்கள் ஆகியவற்றின் உட்புறத்தை பாதிக்கவைத்து உடல் உறுப்புகளை பழுதாக்குகின்றது. பார்வை நரம்புகள், கை கால் நரம்புகள் பாதிப்பிற்குள்ளாகி குடற்புண் ஏற்பட்டு ஈற்றில் இரப்பைஅழற்சியும் ஏற்படும். நாம் சாப்பிடுகின்ற எந்த உணவும் ஜீரணமடைந்த பிறகு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு இரத்தத்தோடு கலந்து விடும். இச்சத்துக்கள் கல்லீரலுக்கு சென்று அங்கு பல்வேறு மாற்றங்களையும் பெறும். உடலின் தேவைக்குப்போக மீதமுள்ள பல்வேறு சத்துக்களும் கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். அதேபோல் மது அருந்தும் போதும் அது சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு கல்லீரலை சென்றடையும். இங்கு மதுவின் வளர்ச்சி மாற்றங்களில் கல்லீரல் பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறு மதுவும் அதிலுள்ள நச்சுப்பொருட்களும் கல்லீரலைப் பாதிக்கும். மதுவைத் தொடர்ந்து அதிகமாக அருந்தும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிப்பாகும். கல்லீரலில் கொழுப்பமிலங்கள் அதிகமாகத்தங்குதல், கொழுப்புப்பொருட்கள் அதிகமாக மிதந்து கல்லீரல் வீங்குதல், கல்லீரல் அழற்சியால் கல்லீரல் செல்கள் பாதிக்கப்பட்டு நலிவடைதல், ஃகெயலின் என்ற பொருட்கள் தோன்றுவதால் கல்லீரல் செல்கள் வீங்கி பெரஜதாதல் போன்றவை தோன்றி இறுதியில் நோயாக மாறுகிறது.
இலங்கையில் கூட கடந்த ஆண்டு தை மாதம் 14 பேர் மரணிக்கவும் 70க்கு மேற்பட்டோர் நோய்வாய்ப்படவும் காரணமாக கசிப்பு என்னும் போதைப்பொருள் காரணமாகியது. இதில் வியக்கத்தகு விடயம் என்னவென்றால் இலங்கை மது வரித்திணைக்கள அதிகாரியும் போதைப்பொருளாகிய கசிப்பை நுகர்ந்து மரணித்த 14 பேரில் ஒருவராவார்.
தொடரும்................................
Comments
Post a Comment