புகைப்பிடித்தலை நிறுத்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்
பின்னர்.....
பின்னர்.....
- 8 மணி நேரம் - குருதியில் நிகோடின் காபன் ஒரு ஒக்சைட் இன் அளவு அரைவாசியாக குறைகிறது அத்துடன் ஒட்சிசனின் அளவும் பழைய நிலைக்கு திரும்புகிறது.
- 24 மணி நேரம் - எமது உடம்பிலிருந்து காபன் ஒரு ஒக்சைட் அகற்றப்படுவது மட்டுமல்லாது குடல்களும் புகைப்பிடித்தலால் உடம்பில் படிந்த கழிவுகளை அகற்ற ஆரம்பிக்கின்றது.
- 48 மணி நேரம் - எமது உடம்பில் இருந்து நிகோடின் முற்றிலுமாக அகற்றப்பட்டு விடும். சுவாசிப்பதற்கும் சுவைப்பதற்குமான தகவு மிகவும் முன்னேற்றகரமான வகையில் இருக்கும்.
- 72 மணி நேரம் - சுவாசிப்பது இலகுவாக இருக்கும். உங்களது சக்தி மட்டம் அதிகரிக்கிறது.
- 1 மாதம் - உங்களது தோல்கள் முன்னேற்றகரமான நிலையை அடையும் அல்லது விருத்தி அடையும்.
- 3-9 மாதம் - இருமல் இழுப்பு மற்றும் சுவாசம் சார்ந்த நோய்கள் விலகத் தொடங்கும். உமது நுரையீரலின் தொழிற்பாடும் 10 ஆல் அதிகரிக்கும்.
- 1 வருடம் - புகைப்பிடிப்பவருடன் ஒப்பிடும் போது மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அரைவாசியளவுக்கு குறைக்கப்படும்.
- 10 வருடம் - புகைப்பிடிப்பவருடன் ஒப்பிடும் போது நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அரைவாசியளவுக்கு குறைக்கப்படும்
- 15 வருடம் - மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் சாதாரண ஒரு மனிதருக்கு காணப்படும் அளவு காணப்படும். http://www.patient.co.uk/health/Smoking-The-Benefits-of-Stopping.htm
Comments
Post a Comment