.............. இவ்வாறான போதைப்பொருட்களுள் மிகுந்த ஆபத்ததான விளைவைத்தருவதில் முதன்மையாக காணப்படுவது புகையிலையாகும். இதிலும் சிகரெட் மிக மிக ஆபத்தானதொன்றாக காணப்படுகின்றது. ”பகை புகை மிகை நகை” என்பது ஆன்றோர் வாக்கு. அதாவது மிகையான சந்தோசத்திற்கு புகை பகையாக விளங்கும் என்பதே இதன் கருத்தாகும். ”தீயிலும் தீயார் தீயினை வாய்தனில் நயப்பர்”. இதுவும் ஆன்றோர் வாக்கு. புகைப்பிடித்தலால் குறித்த நபரை புகைப்பதற்கு எங்ஙனம் ஆழமாக அடிமையாக்கும் என்பதே மேற்காட்டப்பட்ட வசனம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு ஒருவர் புகைப்பிடிப்பதன் மூலம் அவரின் வாய் வெப்பத்தினால் கருகுவது மட்டுமல்லாது சேவ்விதழும் கருமையாகின்றது. உலகில் ஏற்படும்
மொத்த நோய்களில் 4.1% ஆன நோய்கள் புகைத்தலால் ஏற்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த புகைப்பிடித்தல் பழக்கம் இளைஞர்கள் பலரிடத்தில் காணப்படுவதற்கான காரணம் திரைப்படங்கள், பிரபல்யம் பெற்றவர்களின் விளம்பரங்கள் தான் என்ற கருத்தும் நிலவுகின்றது. திரைப்படங்களில் நடிகர்கள் புகைப்பிடிப்பதை உற்றுநோக்கும் இளைஞர்கள் தாமும் அவ்வாறே செய்ய எத்தனிக்கின்றனர். பாடசாலைகள், கல்லூரிகள், வாசிக சாலைகள் ,விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றிற்கு வெளியே பல ஆசாமிகள் ஆசைவாரத்தைகள் கூறி பலரைப் புகைப்பிடிக்க வைக்கிறார்கள்.
Comments
Post a Comment