எனது ஆய்வின் முடிவை நோக்கிய பாதை
ஆய்வின் முடிவிற்கான சாத்தியம்
உலகில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் மிகச்சிறிய துணிக்கைகள் தொட்டு பெரிய உயிரினங்கள் வரையானவற்றின் சிறு சிறு அசைவுகளுக்கும் என்று அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் விஞ்ஞான அடிப்படையிலான விளக்கத்தை வழங்கிட முடியும். இது வரை காலமும் பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் தத்துவவியலாளர்கள் என்று பலரும் வகுத்துச்சென்ற கொள்கைகள் சூழலின் நடைமுறைப்போக்கை தெளிவாக ஆராயவும் துல்லியமாக எதிர்வுகூறவும் எளிதான பல வழிகளை எமக்கு வழங்கிச் சென்றிருக்கின்றன. அவர்கள் எமக்கு காலத்திற்கு காலம் வழங்கிச் சென்றிருக்கின்ற பல விதிகள் காரணமாக கடந்த காலத்தில் விஞ்ஞானத்தின் பல துறைகளிலும் ஆராய்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். பல தெளிவுகளை கண்டிருக்கிறோம். ஆச்சரியமாக தெரிந்த விடயங்கள் கால ஓட்டத்தில் அடங்கியிருப்பதை அனுபவ வாயிலாக அறிந்திருக்கிறோம்.
ஆகவே எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதற்குரிய அடிப்படை கட்டமைப்பும் அது சமூகத்தில் உண்டு பண்ணும் விளைவும் விஞ்ஞானத்தின் அம்சங்களில் சார்ந்திருக்கவேண்டும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
- நடைமுறைவாழ்வில் நாம் அவதானிக்கும் எந்தவொரு சம்பவத்தின் பின்னணியும் விஞ்ஞானத்தைசார்ந்திருக்க முடியுமாயின் இப் பெர்முடா முக்கோணத்தின் மர்மங்களையும் ஏன் விஞ்ஞானத்தின் கொள்கைகளைக் கொண்டு ஆராயமுடியாது?
- பெருமளவான மக்களை சிக்கல்களிலும் மர்மங்களிலும் சிக்கவைத்த இப்பகுதியின் பின்னணி ஏன் விஞ்ஞானத்தின் விதிகளில் சிக்கியிருக்கமுடியாது?
மேலும் கருந்துளை ஓர் கண்ணோட்டம் என நான் எனது பதிவில் குறிப்பிட்ட பகுதிகளை வாசிப்பதன் மூலம் கருந்துளை பற்றிய மேலதிக அறிவினைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
கருந்துளை
கருந்துளையானது அண்டவெளியில் மிகப்பெரிய அளவை ஆக்கிரமித்தனவாக அமைந்துள்ளது. பாரிய நட்சத்திரங்களின் தேய்வுகளின் விளைவாக இக்கருந்துளைகளின் தோற்றம் பெறுகின்றன. குறிப்பிட்ட ஓர் எல்லைக்குள் செல்லும் அனைத்து விதமான துணிக்கைகளையும் தமது ஈர்ப்பினால் உறிஞ்சிவிடக்கூடிய ஆற்றல் கொண்டனவாக காணப்படுகின்றது. ஒவ்வொரு கருந்துளைக்கும் வேறுபடுகின்ற இவ் வெல்லையானது கருந்துளையின் நிகழ்வெல்லை எனப்படுகின்றது.
கட்புலனாகும் ஒளி உள்ளிட்ட அனைத்து மின் காந்த அலை வடிவங்களையும் கூட தன்னகத்தே உள்ளீர்த்து விடக்கூடியவையாக உள்ளது. மின்காந்த அலைகள் கூட தப்பி வெளிவரமுடியாத நிலை காணப்படுவதால் உள்ளே நடப்பது எதுவும் வெளியிலிருந்து அவதானிக்கப்படமுடியாது.
தொடரும்......
Comments
Post a Comment