Skip to main content

MAAYA RAJJYAM 12


ஆக பெர்முடா முக்கோணம் என்பது குறிப்பிட்ட சில காலத்தில் மாத்திரம் பாரிய அழிவுகளை ஏற்படுத்தி ஆர்ப்பரித்து விட்டு மற்றைய சந்தர்ப்பங்களில் சாதாரண கடற்பகுதியாக அடங்கிவிடுகிறது. இது பற்றி மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகளும் குறிப்பிட்ட சம்பவங்களை மாத்திரம் சுற்றி நிற்க வேண்டிய அவசியமும் காணப்படுகின்றது. எப்போதும் எதுவும் நடக்கும் என்றில்லாமல் எப்போதாவது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எல்லோரையும் எச்சரிக்கையுடன் பார்க்கவைக்கும் பிரதேசமாக அமைதியாக உள்ளது. திகில்கள் பலவற்றை திரளாக கொண்டிருக்கின்ற இந்தப்பேய் முக்கோணம் பற்றிய கேள்விகளுக்கு பதில்கள் சிலவற்றையாவது தருவதற்கு இடையூறாக அமைவது இந்த மர்ம தேசத்தின் மயான அமைதி என்றால் அது மிகையாகாது.

தடயங்களை பெருமளவில் பெற முடியாமல் போனமை


சிறு குற்றவியல் வழக்குகள் முதல் மாபெரும் அறிவியல் ஆய்வுகள் வரை சாட்சிகளும் தடயங்களும் அவற்றின் வெற்றிகரமான முன்னேற்றத்திற்கு அவசியமாகின்றன. ஒவ்வொரு ஆய்வினதும் தீர்வின் துல்லியத்தன்மையையும் தீர்விற்கான கால அளவையும் தீர்மானிக்கும் இவ்வித்தியாசமான அம்சங்கள் பெர்முடா முக்கோணத்தின் ஆய்வுகளின் போக்கில் தேக்க நிலையை உண்டாக்கும் அளவிற்கு பற்றாக்குறையாகவே காணப்படுகின்றன.

பெர்முடா முக்கோணத்தை பேய் முக்கோணமாக மாற்றிய அனைத்து சம்பவங்களின் போதும் அழிவுகளின் சிதைவுகளும் எச்சங்களும் பெறமுடியாமல் போனது மாபெரும் சவாலாக எழுந்துள்ளது. சம்பவங்களில் நேரடியாக சம்பந்தப்பட்ட அனைவரும் உயிரிழந்தமையும் மிகப்பெரிய கேள்விக்குறியையே தோற்றுவித்துள்ளது. சில சில 2ம் 3ம் நிலை சாட்சிகள் கிடைத்துள்ள போதும் முதல் நிலை சாட்சிகள் கிடைக்காமையானது மர்மங்களை மேலும் கிளறிவிடுவதாகவே அமைகின்றது.


பெர்முடா முக்கோணத்தைப் பொறுத்த வரை அதன் ஆய்வுகளின் போக்கிலான சவால்களுக்கு மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலான அதன் தனித்துவமாகவும் இந்த பெரிய தடயப்பற்றாக்குறை விளங்குகின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகளின் முடிவுகளின் படி மிகக்குறைவான தடயங்களைக் கொண்டுள்ள ஆய்வுகளில் பெர்முடா முக்கோணம் பற்றிய ஆய்வுகள் முதலிடத்தில் உள்ளது.

தொடரும்...........

Comments

  1. தொடருங்கள்.....
    சுவாரசியமாக உள்ளது....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...