கூர்ப்பு ஒரு இனம் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் போது அது கூர்ப்பு மாற்றங்களுக்கு உட்படும் என்று சாள்ஸ் டார்வின் தனது கொள்கையில் வெளியிட்டு உள்ளார். இதன்படி மனிதனுடைய கூர்ப்பு மாற்றத்தை நாம் அவதானிப்பின் 1. நிமிர்ந்த தோற்றம் மேலும் ஒழுங்காக வருகிறது. 2. மூளையின் கனவளவுக்கும் உடலின் கனவளவிற்கும் இடையிலான விகிதம் அதிகரிக்கிறது. 3. பெருவிரலின் எதிரிடை ஆற்றல் அதிகரிக்கிறது. 4. நுட்பப்பிடி முறை ஆற்றல் விருத்தி அடைகிறது. மேற்கூறப்பட்ட மாற்றங்கள் இதுவரை மனிதனில் நீண்டகால அடிப்படையில் மாற்றமடைந்து வருவதாகும். ஆகவே இம்மாற்றங்கள் இனியும் தொடர்ந்து நடைபெறும் என்பது தெளிவாகிறது. மனிதன் மிகவும் நிமிர்ந்த தோற்றத்தை அடைவான். முளையின் கனவளவு அதிகரிக்க தலையின் பருமன் கூடும். அதே நேரத்தில் அவனது உடல் மெலிந்து குறுகிய தோற்றம் உடையதாக மாறும். பெரும்பாலும் மனிதனில் பெரும் பயன்பாட்டிற்கு உள்ளாக்கப்படும் அங்கங்கள் வளர்ச்சியடைய மற்றயவை மெதுமெதுவாக மறையத்தொடங்கும். ஆகவே எமது எதிர்காலத்தவர்களின் தோற்றத்தை நாம் அனுமானித்து விட்டோம். அந்நிலையில் அவர்களது தொழில்நுட்ப வளர்ச்சியும் உயர்வாகும். (