நாம் இயங்குவதால் இறந்தகாலத்தை அடைவோமா?
ஒருவர் ஏதாவது இயக்கத்தில் இருக்கும் போதே அவர் மற்றவர்களை விட காலத்தால் மெதுவாகிறார். ஆனால் இந்தக்கால வித்தியாசம் மிக மிக குறைந்ததாக இருக்கும். அதாவது எம்மால் உணர்ந்து கொள்வது கடினமானது. காரணம் அவரின் வேகம் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடுகையில் மிக மிகக்குறைவானதாகும்.
உதாரணமாக
நாம் ஒரு சைக்கிளில் இயங்கினால் கூட எமக்கு நேரம் மெதுவாகவே இருக்கும். ஆனால் அந்த நேரம் மிகவும் குறைவானது. எனவே அதைப்பரீட்சித்துப்பார்க்கவேண்டும் எனில்
- மிக மிக மிக ............................... குறைந்த நேரங்களையும் அளவிடக்கூடிய கடிகாரம் வேண்டும்.
அல்லாது விடில்
- நாம் இயங்கும் வாகனங்களின் கதியை மிகவும் அதிகரித்தால் அந்த நேரவித்தியாசத்தை உணரமுடியும்.
அதாவது ஒருவர் அவ்வாறு உயர்வேகத்தில் இயங்கினால் அவ்வாறு இயங்குபவர் மற்றவர் கண்களுக்கு புலப்படாமல் போவார். ஏனெனில் அவர் மற்றவர்களை விட காலத்தால் மெதுவானவர்.
நாம் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடக்கூடிய வகையிலான வேகமுடைய வாகனங்களில் இயங்குவோமாயின் இந்த மாற்றத்தை உணரமுடியும். அதாவது இயங்குகின்ற எமக்கு காலத்தில் ஏற்படும் மாற்றம் வழமையானது போல தென்படினும் அது உண்மையில் வழமையானது அல்ல. எம்மை விட முன்னோக்கிய காலத்தை அனுபவித்தவர்களாக வாகனத்திற்கு வெளியே இருப்பவர்கள் காணப்படுவார்கள்.
கவனிக்கவேண்டியது
நான் கூறுகின்ற வேகமானது ஒளியின் வேகத்துடன் ஒப்பிடக்கூடியதாயினும் ஒளியின் வேகத்தை விட குறைவானது.
சரி, இப்போது ஒரு கேள்வி எழக்கூடும்.
அதாவது மற்றவர்கள் எம்மை விட முந்திச்செல்கின்ற காலத்தில் இருப்பார்கள் எனின் எமது நிலை என்ன?
அவர்களுடன் ஒப்பிடும் போது குறைவான காலத்தில் உள்ள நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின் அவர்களது இயல்பான காலத்தின் இறந்தகாலமாகி விடுவோம். அதாவது நாம் சிறிது நேரத்தின் பின் வாகனத்தில் இருந்து இறங்க நேரிடின் அப்போதும் எம்மால் மற்றவர்களை கணமுடியும். ஆனால் அது தற்போது எமது இயல்பான காலத்தில் இருக்கவேண்டியவர்களின் எதிர்காலத்தோற்றமாகும்.
உதாரணமாக இதனை இரு நபர்களை வைத்து விளக்கலாம் என எண்ணுகிறேன்.
.... கோபு, கோகுல் என்ற இரு சகோதரர்களை கருதுக.
கோகுல் ஆனவர் உயர்வேகத்தில் இயங்கும் வாகனத்தில் இயங்குகிறார் எனின் அவர் சிறிது நேரத்தில் கோபுவிற்கு புலப்படாது போவார். பல மணித்தியாலயங்களின் பின் கோகுல் தனது இயக்கத்தை முடித்து விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வருவாராயின் அவரால் கோபுவைக்காணமுடியும். ஆனால் எக்காலத்தில் இருந்து அவர் வந்தாரோ அக்காலத்தில் இருந்த கோபுவினுடைய இயல்பான காலத்திற்குரிய கோகுலை கோபுவால் காணமுடியாது.
ஆனால்ஒளியின் வேகத்தை விட குறைந்த வேகத்தில் இயங்கும் வரை அவர் இயங்கத்தொடங்கிய நிலையின் பின்னரான நிகழ்வுகளையே அவரால் அனுபவிக்க முடியும்.
அதாவது நாம் வாகனத்தில் இயங்க தொடங்கிய பின்னர் வரும் நிகழ்வுகளில் ஏதோ ஒரு நிலையை அனுபவிக்கலாம்.
அப்படியாயின் எமது இறந்தகாலத்தை நாம் அடைவது எப்படி?
அடுத்த பதிவில் காணலாம்....... காத்திருங்கள்......
நண்பரே,
ReplyDeleteநல்ல பதிவு. நீங்கள் வேகமாகச் செல்பவர்கள் இறந்த காலத்திற்குச் செல்கிறார்கள் என எழுதியிருக்கின்றீர்கள். அதாவது, வேகமாகச் செல்பவர் பிறரின் பார்வையிலிருந்து மறைவர் எனக் கூறுகிறீர்கள். அப்படியாயின் மிக அதிக வேகத்தில் பயணிக்கும் ஒளியினை எவ்வாறு நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது? நீங்கள் கூறுவதுபடி பார்க்கப்போனால் உதாரணமாக, நீங்கள் ஒரு டார்ச் லைட்டை இயக்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அக்கணத்தில் டார்ச்சிலிருந்து வெளியாகும் ஒளி, உடனே கடந்தகாலத்துக்குப் போய்விடும். (அதாவது உங்களால் அதனைக் காண முடியாது) உங்கள் வாழ்க்கையில் சில வருடங்கள் கழித்து அந்த ஒளியை உங்கள் மறைந்த பாட்டனார் காணக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அப்படியாயின் நாங்கள் எவ்வாறு ஒளியைக் காண்கிறோம்?
வேகமாகச் செல்லும் ஒரு பொருளுக்கு நேரம் மெதுவாகச் செல்லுமே தவிர அப்பொருள் கடந்த காலத்துக்குச் செல்லாது! அதாவது, கோகுல் உயர்வேகத்தில் இயங்குகிறாராயின், கோபுவுக்கு ஐந்து நிமிடங்களாகத் தோன்றுவது, கோகுலுக்கு பத்துநிமிடங்களாகத் தோன்றும். அதாவது ஐந்து நிமிடங்களில் செய்யவேண்டிய வேலையை கோகுல் பத்து நிமிடங்களில் மெதுவாகச் செய்வதாக கோபுவுக்குத் தோன்றும். ஆனால் கோகுலுக்கு தான் சரியான வேகத்தில் இயங்குவதாகவே தோன்றும். அதாவது கோபு, கோகுலின் கைக்கடிகாரம் மிக மெதுவாக ஓடுவதாக நினைப்பார். ஆனால் கோகுலுக்கு இந்த மாற்றம் தெரியாது. அவரோ, கோபுவின் கைக்கடிகாரம்தான் வேகமாக ஓடுகின்றது என எண்ணுவார். இதுதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வேக கால நிறைத் தொடர்பினை விளக்க எடுத்துக்கொண்டதாகும். எனவே வேகமாகச் செல்லும் ஒரு பொருளுக்கு நேரம் மெதுவாகச் செல்லுமே தவிர அப்பொருள் கடந்த காலத்துக்குச் செல்லாது!
Proof: http://www.costellospaceart.com/html/time_and_the_speed_of_light.html
என் கருத்துக்களில் மாற்றுக் கருத்துகள் ஏதும் இருந்தால் தயவுசெய்து ஆதாரத்துடன் குறிப்பிடவும்.
மிக்க நன்றி.
அப்புறம் நண்பரே, நீங்கள் நினைவின் வேகத்தைப் பற்றி யாதும் கூறவில்லையே?
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteமீண்டும் உங்கள் வருகைக்கு நன்றிகள்!!!
உங்களது விமர்சனங்கள் இத்தொடருக்கான கருத்துப்பரம்பலை அதிகரிக்கப்போவதையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம்.
நாம் உங்களுக்கு ஏற்கனவே கூறியது போல சகல விமர்சனங்களுக்குமான எதிர்ப்பதிவு “யார் ? இவர்கள்“ தொடரின் இறுதிப்பகுதியில் தனி்ப்பதிவாக வெளிவரும்.
அதுவரை தயவுசெய்து பொறுமையுடன் காத்திருக்கவும்.
நன்றி.
நன்றி நண்பரே, விளக்கங்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteநன்றி.
Boss
ReplyDeleteENAKU ORU UNMA THERINYAGANUM
என்னது என்டா இறந்தகாலத்தை பார்க்க அதி-வேகத்தில் தான் போகனும் என்டு விதி முறை எதும் உண்டா?
I WILL SAY NO
because it not depended on speed.its depended on his/her view