Skip to main content

Posts

Showing posts from April, 2010

பனாமா கால்வாய் 04

பனாமா கால்வாயின் நீளத்தை கருதும் போது அது அண்ணளவாக 51மைல் தூரத்தினைக்கொண்டதாக அமைகின்றது. பனாமா கால்வாயினூடான பயணத்தை நோக்கும் போது முதலில் அத்திலாந்திக் கடலினூடாக நுழைந்து லைமன் விரிகுடாவில் அண்ணளவாக 7மைல் தூரம் கொண்ட கால்வாயினூடாக பயணிக்க வேண்டியிருக்கும். இந்த 7மைல் தூரக்கால்வாய் பனாமாய் கால்வாய் உருவாக்கத்திற்கென அடியில் உள்ள சேறு மற்றும் மண் என்பவற்றை அகழ்ந்து பயணத்திற்கென உருவாக்கப்பட்ட வழியாகும். இது முடிவடையும் இடத்தில் இருந்து அண்ணளவாக 11.5மைல் தூரத்தில் கட்டூன் அணைகள் உள்ளன. 3அணைகளை கொண்ட தொடரையே கட்டூன் அணைக்கட்டுகள் என்கிறோம். செயற்கையாக அமைக்கப்பட்ட இந்த அணைக்கட்டுக்களால் (பாரிய நீர்த்தொட்டிகள்) குறிப்பிட்ட கப்பல்கள் சுமார் 26மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட்டு கட்டூன் வாவியினுள் செலுத்தப்படுகிறது. இதிலிருந்து 32மைல் அளவிலான தூரம் மேற்படி வாவியினுடாக பயணித்து கப்பல்கள் கம்போவா எனும் இடத்தை அடைகின்றன. அதிலிருந்து படிப்படியாக முன்று கட்டுக்கள் மூலம் கப்பல்கள் கடல் மட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு பசுபிக் கடலை அடைகின்றன. பனாமாக்கால்வாயினூடான பயணம் பற்றிய ஒரு குறிப்பினை மேலுள்ள ப...

மாய ராஜ்ஜியம் 19

2. அப்படியென்றால் அப்பகுதியானது எவ்வாறு வெவ்வேறு நேரங்களில் கால மாற்றம் அடையக்கூடியதாக மாற்றம் பெறுகின்றது? இதற்கான உங்கள் விளக்கம் என்ன? நான் ஏற்கனவே குறிப்ப்பிட்டுள்ளதன் படி அண்ட வெளியில் பல்வேறு இடங்கள் இவ்வாறு காணப்படுகின்றன. அவை அவ்வாறு அங்கே ஏன் தோற்றம் பெறுகின்றன என்று இதுவலை எமது விஞ்ஞான வளர்ச்சிகளால் அறியப்படவில்லை. ஆனாலும் இவ்வாறு தோற்றம் பெறுவதற்கான சூழல் காரணிகள் அங்கே அமைந்து விடுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. இது போன்ற சூழல் அமைவது தான் எனது ஆய்வுக்களத்தில் இவ்வாறான நிலமை தோன்றுவதற்கான காரணமாகும். அவ்விடத்தை சூழ ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களின் செல்வாக்கு காரணமாக அச்சூழ்நிலைகள் அவ்விடத்தில் உருவாகாத போது அவ்விடத்திலுள்ள கால மாற்றம் மீண்டும் வழமைக்கு திரும்புகிறது. மீண்டும் சூழ்நிலைகள் பொருத்தமாக அமைகின்ற போது அங்கே காலமாற்றம் ஏற்படும். இதன்விளைவாக கருந்துளை தோற்றமும் நடைபெறும். மறைவுகளும் தொடரும். 3.பெர்முடா மர்மங்களிற்கு கருந்துளை உருவாக்கம் தான் காரணம் என்று கூறினீர்கள். உங்கள் ஆய்வின் முற்பகுதியில் நீங்கள் விவரித்திருந்த FLIGHT 19 என்கின்ற சம்பவம் உள்ளிட்ட சி...

மாய ராஜ்ஜியம் 18

அறிவித்தல் … இது உங்களின் கவனத்திற்கு இந்தப்பகுதியினை வாசிக்கும் முன்னர் இதற்கு முன்னைய பகுதிகளை வாசிப்பதன் ஊடாக இதனை அணுகுவதன் மூலம் இப்பதிவில் குறிப்பிட்டு இருப்பவை தெளிவாக விளங்குவது திண்ணம்………. ம்ம்ம்…. எனி வாசியுங்கோ……… எனது ஆய்வின் முடிவு பல்லாயிரக்கணக்கான மக்கள், பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் இழப்பு, பல கப்பல்கள் மற்றும் விமானிகளின் மறைவு, சில இடங்களில் கப்பல்கள் இருக்க பயணகள் மட்டும் மறைவு என்று ஏராளமான பல மர்மங்களை பத்திரிகைகளின் பேனாக்களிற்கும் அறிவிப்பாளர்களின் சொற்களுக்கும் என்று வழங்கிவிட்டு சென்றிருக்கின்ற இந்த பெர்முடா முக்கோணத்தின் மர்மத்திற்கான ( நான் ஆராய்ந்து அறிந்த ) முடிவினை பலம் வாய்ந்த விஞ்ஞான பின்னணிகளின் துணையுடன் இங்கே வழங்கலாம் என எண்ணுகிறேன். ஏற்கனவே அண்டத்தில் நிலவும் நிலையற்ற காலத்தன்மை பற்றி தெளிவாக தெரிவித்திருக்கின்றேன். அண்டவெளியில் பல்வேறு இடங்களில் நேரம் வேறுபட்டதாக இருப்பது பற்றி குறிப்பிட்டிருந்தேன். அப்படிப்பட்ட நேரத்தில் வேறுபட்ட ஒரு இடம் பூமியின் உள்ளே குறிப்பிட்ட ஓரிடத்தில் மாத்திரம் அமைந்திருப்பது அறிவியல் உண்மைகளின் படி, அறிவியலாளர...

பனாமா கால்வாய் 03

இவ்வாறு பனாமா செயற்கைக்கால்வாய் தோற்றத்திற்கான பல்வேறு ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 16ம் நூற்றாண்டில் இருந்து மேற்படி கால்வாய் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்படுவதும் பின்னர் தவிர்க்கமுடியாத காரணங்களால் அவை தடைப்பட்டுப்போவதும் வழமையான பல்லவியாகவே இருந்துவந்தது. 1876ம் ஆண்டும் ஓர் சர்வதேச நிறுவனம் உருவாக்கப்பட்டும் அதன் மூலமாக செயற்கை கால்வாய் அமைப்பது தொடர்பான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதுவும் ஈற்றில் நீர்மேல் எழுத்தானது தான் மிச்சம். அத்திலாந்திக் சமுத்திரத்தில் இருந்து பசுபிக் சமுத்திரத்திற்கு கரிபியன் கடலினூடாக பயணத்தினை மேற்கொள்ளும் போது நேரமும் பயணதூரமும் பெருமளவில் மிச்சப்படுகிறது என்பது உண்மை. உதாரணமாக சன்பிரான்சிஸ்கோ இலிருந்து நியூயோர்க் இற்கு செல்லும் போது கரிபியன் கடலினூடாக செல்வோமேயானால் சுமார் 18000 மைல் தூரம் மிச்சப்படுத்தப்படும். .இவ்வாறான காரணங்களினால் பனாமா கால்வாய் உருவாக்கம் பல்வேறு இடர்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அவை உருவாக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பினை பல்வேறு நாடுகளும் கொண்டிருந்தன. அண்ணளவாக 1880ம் ஆண்டளவில் பிரான்ஸ் மேற்படி செயற்பாட்டில...

மாய ராஜ்ஜியம் 17

ஆய்வாளர்களின் கருத்துகள் முதன் முதலாக ஒளியைக்கூடத்தப்பவிடாத அளவுக்கு வலுவான ஈர்ப்புசக்தி கொண்ட பொருள் பற்றிய எண்ணக்கருவை 1783 இல் பிரித்தானிய வானியலாளர் JOHN MITCHEL வெளியிட்டார். இதே கருத்தையொத்த முடிவை 1795 இல் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த பௌதிகவியலாளர் PIERRE SIMON LAPLACE ம் வெளியிட்டார். ஆனாலும் தற்போது பலராலும் புரிந்துகொள்ளப்பட்டதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான கருந்துளை பற்றிய தெளிவான விளக்கமானது 1916 ம் ஆண்டில் ALBERT EISTEIN அவர்களால் வெளியிடப்பட்ட பொதுச்சார்புக் கோட்டில் () இருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டது. அக்கொள்கையின் படி மிகப்பெரிய திணிவானது மிகச்சிறிய வெளியில் இருக்கும் போது சூழவுள்ள வெளியானது () உட்புறமாக மையத்தை நோக்கி வளைந்து அதனுள் இருக்கும் எந்த பொருளும் கதிர்வீச்சுகளும் வெளியே செல்லமுடியாத படி தடுத்துவிடும். இத்தத்துவமானது கரும்பொருளானது மையத்தில் புள்ளி போன்ற சிறப்பு ஒருமையுடன் () கூடிய வெறுமையான வெளியாகவும் அதன் விளிம்பில் உள்ள நிகழ்வெல்லையாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சக்திப்பொறித்தாக்கங்களின் படி கருந்துளைகளானவை தம்முள்ளே அகப்பட்டவற்றை அப்படியே வைத்திருக்...

பனாமா கால்வாய் 02

வட அமெரிக்கா கண்டத்தையும் தென் அமெரிக்கா கண்டத்தையும் இணைக்கும் வகையில் அதன் பௌதிக கட்டமைப்பைக் கொண்ட பனாமா நாட்டில் பெருமளவு வருமானம் வரக்கூடிய வழி இந்த பனாமா கால்வாய் மூலம் தான். இவ்வாறு கடல் சார் வர்த்தகத்தில் தவிர்க்கமுடியாத ஒரு பாதையாக விளங்கிவரும் பானாமாய் கால்வாயின் தோற்றத்தை நோக்கும் பொழுது அது பண்டைய கால வரலாற்றுச்சுவடுகளை ஆராய வைக்கிறது. 16ம் நூற்றாண்டளவில் பெரு, ஈக்குவேடார் மற்றும் ஆசிய நாடுகள் என்பவற்றில் இருந்து ஸ்பெய்ன் நாட்டுக்கான வர்த்தகத்தில் பல்வேறு பொருட்களை இடமாற்றம் செய்வது மிகவும் கடினமானதொன்றாக இருந்து வந்தது. இவ்வாறான கடினமான நீண்ட வர்த்தக பாதையினை எவ்வாறு இலகுவாக்கலாம் என்று அக்கால தொழில்நுட்ப வல்லுனர்கள் யோசித்து ஈற்றில் பனாமா நாட்டிலிந்து இருந்து ஒரு சிறிய பகுதியை அகற்றுவதன் மூலம் மேற்படி வர்த்தக செயற்பாடுகளை இலகுவாக்கலாம் என்று 1524ம் ஆண்டளவில் தீர்மானிக்கப்பட்டது. மேற்படி திட்டம் முழு அங்கீகாரத்தையும் பெறவே பனாமாவின் ஊடாக செயற்கையாக ஒரு கால்வாயினை அமைக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டு அதற்கான வரைபடமும் 1529ம் ஆண்டளவில் தயாரிக்கபட்டது. ஆனால் ஐரோப்பிய நாடுகளி...

மாய இராஜ்ஜியம் 16

பொதுவாக அனைத்து பொருட்களுக்கும் காணப்படுகின்ற கனவளவு ஆனது கருந்துளைக்கு மிகவும் சிறியதாகும். இங்கு அதன் கனவளவனது பூச்சியத்தை அணுகுவதாகவே காணப்படுகின்றது. ஆனால் கருந்துளையானது பிரமாண்டமான திணிவைக்கொண்டது. இதன் காரணமாக உயர் அடர்த்தியைக் கொண்டு விளங்குகின்றது. அதாவது அடர்த்தியானது முடிவிலியை அணுகுகின்றது. ஆகவே கருந்துளைக்கு மேற்பரப்பு என்று இருப்பதில்லை. இது சம்பந்தமான ஆய்வுகள் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கருந்துளை மின் காந்த அலைகளையும் உறிஞ்சி விடுவதால் கட்புலனாகாத நிலையிலும் மேற்பரப்பு மற்றும் கனவளவு இல்லாமையாலும் இது தொடர்பான ஆய்வுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது பலருக்கும் புரிவதில்லை. ஆகவே அது சம்பந்தமாகவும் விளக்கமளிப்பது எனது ஆய்வின் முடிவை நீங்கள் உறுதியாக ஏற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். கருந்துளை பற்றிய ஆய்வுகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் முறைகள் கருந்துளையானது தனது நிகழ்வெல்லைக்கு வெளியே உள்ள பொருட்கள் மீதும் ஈர்ப்பைக்கொண்டு காணப்படுகின்றது. இதன் விளைவாக சில இடங்களில் குறிப்பிட்ட அளவான நட்சத்திரங்கள் கருந்துளையை மையமாக கொண்டு சுற்றுகை...

பனாமா கால்வாய் 01

இன்றைய காலகட்டத்தில் உலகவர்த்தகமானது தரைமார்க்கம், கடல்மார்க்கம், ஆகாயமார்க்கம் என்ற மூன்று பகுதிகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொருளாதார விருத்தியிலான வர்த்தக செயற்பாடுகளை நோக்கும் போது கடல் மார்க்கத்திலான செயற்பாடுகளே அதிகமுக்கியத்துவம் வாய்ந்தவையாக காணப்படுகின்றன. அதிலும் கடல் மார்க்கத்து இயந்திரங்களாக கருதப்படக்கூடியவையான கப்பல்களும், கப்பல்களின் வேகங்களும் கடல்மார்க்க வர்த்தக நிலைகளில் பாரிய செல்வாக்கினை வகிக்கின்றன என்றால் அது மிகையாகாது. கப்பல்கள் கடலில் பயணிக்கும் நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க கப்பலினை பராமரிப்பதற்கான செலவுகள் அதிகரிக்கின்றன. இவ்வாறு செலவுகள் அதிகரிக்க,அதிகரிக்கப்படும் செலவுகள் கப்பலின் மீது ஏற்றிச் செல்லப்படும் பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணமாகிறது. இது உலகளாவிய ரீதியில் பொருட்களின் விலைகளைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன. இவ்வாறான செயற்பாடுகளைக் குறைக்கும் பொருட்டு கப்பல் கப்டன்கள் தாமதமின்றி கப்பலை செலுத்துதல் மற்றும் மிகவும் குறுகியதான பாதைகளை வரைந்து அதன் வழியே கப்பல்களை செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் இவ்வாறான பொருட்களின் விலையேற...

கண்ணம்மா 10

“அக்கா நான் நிச்சயமா ஒரு டொக்டரா வந்து உன்ன ஒரு மகாராணி மாதிரி வச்சிருப்பன்! “ ”நீ என்ர புள்ளடா என்ர ஒவ்வொரு அசைவும் என்ன சொல்லுதுண்டு எனக்குத் தெரியும்.“ கடந்தகால வார்த்தைகள் குமரேசனின் உள்ளத்தில் கூரிய அம்புகளென பாய்ந்து தொடர் வலிகளை உண்க்கிய வண்ணம் இருந்தன. மெழுகுதிரி பிறருக்கு இருள் அகற்றி ஒளி கொடுத்து தன்னை அணுஅணுவாய் உருக்குலைப்பது போல தன் அக்காளும் சிறு வயதில் இருந்து தான் அனுபவிக்கவேண்டிய அனைத்து ஆசாபாசங்களையும் புறந்தள்ளி எனக்காக எனது ஆசாபாசங்களுக்காக எனது ஒளிமயமான கௌரவ வாழ்க்கைக்காக தன்னை உருக்குலைத்த்தை எண்ணி எண்ணி விழிகளில் கண்ணீர் குளம் எனத்தேங்காமல் வற்றாத அருவியாக பாய பாய கதறினான் மௌன மொழியில்……பின் தன்னைத்தானே தேற்றியபடி “ நோ ! இவ்வளவு காலம் நான் எனக்காகவே வாழ்ந்துட்டன்.இனியாவது எனது அக்காவுக்காக வாழணும்.அவங்க கண்ணில இருந்து கண்ணீர பாக்கணும்னா அது புன்னகை மிகுதியால தான் வரணும்” என்று எண்ணியபடி கதிரையில் அமர்ந்திருந்தான். மெல்லத்திறந்த்து கதவு. “டொக்….. டொக்……டொக்….” கதவு திறப்பதையும் வைத்தியரின் சப்பாத்து ஒலியையும் அவதானித்து உடன் எழுந்து “சார் இப்ப அக்கா...

கண்ணம்மா 09

........அக்கா என கதறி அரவணைப்பான் என எண்ணி, ஏங்கிக்கொண்டிருந்த அவள் இதைச்சற்றும் எதிர்பாராது கதறினாள். இவ்வாறு இவள் அழ மனம் சஞ்சலப்பட்டு குமரேசன் ஒருமுறை மீண்டும் திரும்பிப்பார்த்து அவ்விடத்தில் சிறிது நேரம் செய்வதறியாது நின்றான். அப்போது அவனருகே வந்த யுவதி ஒருவர், ”அண்ணே, இது ஒரு பைத்தியம்! அஞ்சாறு மாசமா இங்கதான் கிடக்குது! எப்ப பாத்தாலும் ஒரே அழும்! நீங்க உட்டுட்டு உங்கட வேலயப்பாருங்கோ “. குமரேசனும் இவ் யுவதி கூறியதைக் கேட்டும் தன் அக்காவைக் காணவேண்டும் என்ற அவா காரணமாகவும் அவ்விடத்தை விட்டு நீங்கினான். தன் தம்பியே தன்னைப் பிச்சைக்காரி என்று எண்ணிவிட்டானே ! என எண்ணி நெஞ்சம் வருந்தினாள். ”சாமி ! நான் என்ன தான் குத்தம் செஞ்சன்? ஏன் எனக்கு மட்டும் இப்புடி ஒரே தும்பங்கள் வரூது? நான் உசிர் வாழுற காரணமே என் தம்பி தான! அவனே என்னப்பிச்சக்காரி எண்டு சொல்லுற அளவுக்கு என்ர நிலை வர்றதுக்கு காரணந்தான் என்ன? சாமி ! நான் எனியும் இந்த உலகில வாழ்ந்து என்னதான் பயன்?” என்று கல்நெஞ்சும் கனிய கதறினாள். இவ்வேளை குமரேசன் தான் குடியிருந்த வீட்டை அடைகிறான். வீட்டுக்கதவு மூடப்பட்டு இருக்கிறது. கதவைத் தட்ட...

கண்ணம்மா 08

பஸ் ஊர் நோக்கி சென்று கொண்டிருக்க குமரேசன் தன் அக்கா பற்றிய நினைகளுடன் கனவுலகில் மிதந்து கொண்டிருந்தான்……. கண்களைத் திறந்தபடியே….. இங்கு கண்ணம்மா அணிவதற்கு ஓர் மாற்றுப்புடவை இல்லாது, வசிப்பதற்கு ஓர் வீடு இல்லாது, கதைப்பதற்கு ஓர் உறவு இல்லாது, நெஞ்சம் மகிழ ஓர் குடும்பம் இல்லாது, உண்பதற்கு ஓர் உணவில்லாது, தெருவோரத்தில் வீழ்ந்து கிடக்கிறாள் அடியற்ற மரம் போல………………!!!!! பஸ் ஊரில் வந்து பஸ் தரிப்பிடத்தில் நிற்க, குமரேசன் கீழே இறங்கி, கண்ணம்மா வீழ்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கடைக்கு, தன் உயிரிலும் மேலான அக்காவிற்கு இனிய தின்பண்டங்களை வாங்கவென வந்து பொருட்களை வாங்கி தன் (பழைய) வீட்டை நோக்கி நகர்கிறான். வீழ்ந்து கிடந்த கண்ணம்மா அவ்வாறே தற்செயலாக அவனை நோக்குகிறாள். ஆம் ! ஆம் ! இத்தனை காலமாக தன் புண்பட்ட மனதில் சுமந்த அந்தக்குமரேசன் தான். கண்ணீர் அருவி போல் பாய மெல்ல மெல்ல எழுகின்றாள். அவனை நோக்குகின்றாள்……..! “ஐயா ….. தம்பி….!!” தன் வீட்டிற்கு செல்ல ஆரம்பித்த குமரேசன் மெல்ல தன் தலையை திருப்பி கண்ணம்மாவை நோக்குகிறான். அவளை நோக்கி ஒரு பெருமூச்சு விட்டபடி வருகிறான். கண்ணம்மாவின...

கண்ணம்மா 07

நாட்கள் கடந்தோடின. அங்கு குமரேசன் நடந்த பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவனாக தெரிவு செய்யப்பட்டு பட்டம் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாது அதிக மதிப்பெண்கள் பெற்றதனால் தங்கப்பதக்கம் ஒன்றும் வழங்கப்படுகிறது. பல்வேறு தனியார் அமைப்புகளும் பொது அமைப்புகளும் பாராட்டி பரிசில் பல வழங்கி கௌரவித்தன.இவ்வாறு கௌரவித்தவர்களில் ஒரு தொழிலதிபர் எழுந்து “மிஸ்டர் குமரேசன் உங்க முயற்சி இன்றைக்கு பலராலும் வரவேற்கப்படும் ஒரு உன்னத நிகழ்வாக காணப்படுகிறது. பல மாணவர்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரண மாணவனாக இந்நாட்டில் வலம் வருகிறீர்கள். உங்கள் சூழல் எப்படிப்பட்டது? உங்களின் இந்த நிலைக்கு யாராவது உதவியதுண்டா?..... ப்ளீஸ் ரெல்...” குமரேசன் மெல்ல இருக்கையில் இருந்து எழுந்து மேடை தனில் ஏறி மைக் முன்னால் நின்று முதலில் எந்தப்போட்டியாயினும் அதில் வெற்றிகொள்ள எவ்வாறு எம்மை நாம் தயார்ப்படுத்த வேண்டும் எனக் கூறி அடுத்ததாக தன் வாழ்க்கை ஒளிமயமாக காரணமாகிய தன் அன்புத் தெய்வம் தாய் தந்தை அண்ணா அக்கா தம்பி தங்கை நண்பி என பல்வேறு வடிவங்களிலும் இருந்து தன் துயரங்கள் அனைத்தையம் அவளே தாங்கி தன்னை ஒரு குறையம் இல்லா...