வேற்றுக்கிரகவாசிகளின் எமது கிரகத்திற்கான வருகைக்குரிய காரணம் 1.ஆராய்ச்சி நாம் ஏனைய கிரகங்களைப்பற்றி அறிய முயற்சிப்பது போல் வேற்றுக்கிரகங்களில் நிலவும் பௌதிக அம்சம், உயிர்வாழ்வதற்கான சாதக நிலைகள் ஆகியவற்றை ஆராய்வதற்கான நோக்கத்தை எம்மிடம் தாராளமாக கொண்டுள்ளது போன்று ஏனைய கிரகங்களில் வாழும் வேற்றுக்கிரகவாசிகள் எதிர்பார்ப்பதுவும் இயல்பானதே. ஆகவே ஆராய்ச்சி என்பதை அடிப்படையாகக்கொண்டு அவர்கள் எமது கிரகத்திற்கு வருகைதருகின்றனர் என்பது மிகவும் முதன்மையான காரணமாக அமைகின்றது. ஆனால் ஆக்கிரமிப்பு தவிர்ந்த ஆராய்ச்சி நோக்கமாக இருப்பின் அவர்கள் ஆரம்பத்திலேயே எம்முடன் ( பூமியிலுள்ளோருடன் ) தமது உறவுகளை ஆரம்பித்திருக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களிலும் அவர்கள் எம்முடைய உறவுகளை விரும்பவில்லை என்பதை இவ்வாய்வின் முன்னைய பகுதிகளில் குறிப்பிடப்பட்ட உதாரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆகவே இதுவரை பூமியில் அவர்களால் உயிரிழப்புகள் பெருமளவில் இடம்பெறாமைக்கு அவர்கள் நோக்கத்தில் காணப்படும் எம்மீதான சாதகத்தன்மையே காரணம் என்று எண்ணுவது முட்டாள்தனமானது. எனவே அவர்கள் நட்புறவுடன் கூடிய ஆராய்ச்சி நோக்கைக் கொண்டிருக்கவில...