இன்று 60 வகையான கொடூர நோய்களுக்கு மதுபானமே காரணியாக காணப்படுகிறது. மொத்த நோய்களில் மதுபானத்தின் மூலமாக ஏற்படும் நோய் வீதம் 4 ஆக உள்ளது. மதுபானம் அருந்துபவர்கள் தம்மை அறியாமலே பல்வேறு விபத்துக்களை உண்டாக்குகிறார்கள். குடித்துவிட்டு வாகனத்தை வேகமாக ஓட்டுவதால் சாலை விபத்துக்களில் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. இதய நோய்கள், கல்லீரல் பாதிப்பு, பக்கவாதம், வாய் - கல்லீரல் - மற்றும் மார்பு சார்ந்த புற்றுநோய்கள் போன்றவை மதுபானம் பருகுவதாலேயே ஏற்படுகின்றது. இவ்வாறு போதைப்பொருட்களை நுகர்வோர் மீண்டும் மீண்டும் நுகர ஆசை கொண்டு திருட பிச்சை எடுக்க கொலை - கொள்ளை போன்ற செயல்களை செய்யக்கூட தயங்காமல் இருப்பார்கள். இவ்வாறு போதைப்பொருட்களுக்கு இலக்காவதன் மூலம் அற்புத கலைத்திறன், அனுபவ அறிவு, புத்திசாலித்தனம், சுயகௌரவம், பாசப்பிணைப்பு, நம்பிக்கைகள் என அனைத்தையும் இழந்துவிடுகிறார்கள். ...