அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...
இருண்ட பூமி ஒவ்வொருநாளும் பிறக்கிறது . கதிரவன் கதிர்கள் ஒவ்வொரு நாளையும் பசுமையாக்குகின்றன . சுட்டெரிக்கவும் தவறுவதில்லை . வேற்றுலகில் பயணிக்கும் ஒவ்வொரு மனிதனும் கனவெனும் வாகனம் விட்டு இறங்கி பூவுலகை பார்க்கும் கோணங்கள் எத்தனை . ஒருவனுக்கு வெறுப்பாக இருக்கின்ற உலகம் இன்னொருவனுக்கு இனிமையாக இருக்கிறது . இன்னொருவனுக்கு விளையாட்டாக இருக்கிறது . மற்றொருவனுக்கு சூனியமாக இருக்கிறது . ஒவ்வொரு மனிதனும் இறைநிலைக்குரிய சக்திகளை அடையக்கூடிய உள்ளார்ந்த ஆற்றல் கொண்டவன் என்று ஆன்மீகவாதி கூறுகிறான் . ஆனால் ஒவ்வொரு நாளையும் கடக்கும் சராசரி மனிதன் எத்தனை சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது . அந்த நாளின் சவாலை முறியடிக்கத்தவறும் உள்ளங்கள் எத்தனை . சங்கடங்கள் , சந்தேகங்கள் , வெறுப்புகள் , துரோகங்கள் , விரோதங்கள் என்று எத்தனை பரிமாணங்களில் ஒரு உள்ளம் பயணிக்கவேண்டி இருக்கிறது . இத்தனைக்கும் கையில் கிடைக்கும் 1000 ருபாய் தாளினை இரண்டு நாட்களுக்கு மேல் பயன்படுத்த முடியாதது இன்றைய காலகட்டத்தின் துர்ப்பாக்கியநிலை தான் . நாளுக்கு நாள் ஓய்விற்கும் சராசரி மனிதனிற்குமான தொடர்ப...