அனைவரையும் நீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
கடந்த இரு பதிப்புகளின் ஊடாக சொற்களை வடிவமைப்பது குறித்த சில எண்ணக்கருக்கள் பற்றி ஆராய்ந்திருந்தோம். இன்றைய பதிப்பின் மூலமாக CheckBox மற்றும் OptionButton போன்றவற்றின் பயன்பாடு பற்றி ஆராய்வோம்.
பொதுவாக குறிப்பிட்ட தரவுகளின் மீதான தெரிவுகளை மேற்கொள்வதற்கு CheckBox ம் OptionButton ம் பயன்படுகின்றன. இவற்றை பயன்படுத்தி ஒரு சிறிய முறைமை (System) ஒன்றினை உருவாக்கியுள்ளேன்.
இவை இயங்கும் நிலையில் எடுக்கப்பட்ட படங்களும் மேற்படி முறைமைக்கான Source Codes ம் கீழே வழங்கப்பட்டுள்ளன.
//general
Dim X As String
Dim l As String
------------------------------------
Private Sub Command1_Click() // for Ok buttion
X = ""
If Check1.Value = 1 Then
X = X + Check1.Caption
End If
If Check2.Value = 1 Then
X = X + " " + Check2.Caption
End If
If Check3.Value = 1 Then
X = X + " " + Check3.Caption
End If
If Option1.Value = True Then
l = Option1.Caption
Else
If Option2.Value = True Then
l = Option2.Caption
End If
End If
z = MsgBox("The course, you studied is/are " + X + " and you are " + l, vbOKOnly, "Hai")
End Sub
Private Sub Command2_Click()
Unload Me // for cancel button
End Sub
கவனிக்கப்படவேண்டியவை...
CheckBox ஒவ்வொன்றும் தெரிவுசெய்யப்படுமிடத்து அது ஒவ்வொன்றும் தனி ஒரு மாறியினால் (x) உள்வாங்கப்படுவதனால் ஒவ்வொரு CheckBox இற்கான Validation முடிவடைந்ததும் (if condition) மற்றையதற்கான Validation ஆரம்பிக்கும் முன்னர் முதலாவதின் Validation codes இனை முற்றாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும்
உதாரணமாக
If Check1.Value = 1 Then
X = X + Check1.Caption
End If
இல் If condtion இற்கான End If இடப்பட்டபின்னரே மற்றதயற்கான If condition ஆரம்பமாகிறது.
தெளிவின்மைகள் காணப்படுமிடத்து விமர்சனங்கள் வாயிலாக வினவலாம்.
பார்வைகள் தொடரும்...
Comments
Post a Comment