அனைவருக்கும் இனிய வணக்கங்கள் சென்ற பதிப்பில் "Hello World" என்ற வாசகத்தை எவ்வாறு Print பண்ணுவது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பின் மூலம் Text Box இனையும் Command Buttons சிலவற்றினை கொண்டு தரவுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று பார்க்கலாம். அதற்கு முன்னர் Visual Basic IDE(Integrated Development Environment) இல் சில பயிற்சிகளை நாம் செய்து கொண்டிருக்கும் போது தவறுதலாக அங்கு காணப்படும் Tool Box , Properties Window , Form Layout , Properties Window , Project Explorer.. இவற்றில் ஏதாவது ஒன்று Close பண்ணுப்படலாம். அவற்றினை மீண்டும் தளத்திற்கு கொண்டுவருவதற்கு Menu --> View என்று செல்வதன் அவற்றை மீண்டும் பெற்றிடலாம். அத்துடன் அவற்றை இலகுவான வழியில்(Short cut) மீள கொண்டு வருவதற்கான வழியும் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக Properties Window இனை மீண்டும் பெற்றுக்கொள்ள "F4" அழுத்தினாலே போதும். இன்றைய பதிப்பின் மூலம் நாம் அறியவேண்டியது இது தான்.... அதாவது எமது பெயரினை எழுதி அவற்றினை கீழே காட்டப்பட்டுள்ள இரு Command Buttons மூலமாக எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று பார்க்கலாம...