Skip to main content

Posts

Showing posts from September, 2012

விழிநிலை விம்பங்கள்...

இருண்ட பூமி ஒவ்வொருநாளும் பிறக்கிறது . கதிரவன் கதிர்கள் ஒவ்வொரு நாளையும் பசுமையாக்குகின்றன . சுட்டெரிக்கவும் தவறுவதில்லை . வேற்றுலகில் பயணிக்கும் ஒவ்வொரு மனிதனும் கனவெனும் வாகனம் விட்டு இறங்கி பூவுலகை பார்க்கும் கோணங்கள் எத்தனை . ஒருவனுக்கு வெறுப்பாக இருக்கின்ற உலகம் இன்னொருவனுக்கு இனிமையாக இருக்கிறது . இன்னொருவனுக்கு விளையாட்டாக இருக்கிறது . மற்றொருவனுக்கு சூனியமாக இருக்கிறது .  ஒவ்வொரு மனிதனும் இறைநிலைக்குரிய சக்திகளை அடையக்கூடிய உள்ளார்ந்த ஆற்றல் கொண்டவன் என்று ஆன்மீகவாதி   கூறுகிறான் . ஆனால் ஒவ்வொரு நாளையும் கடக்கும் சராசரி மனிதன் எத்தனை சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது . அந்த நாளின் சவாலை முறியடிக்கத்தவறும் உள்ளங்கள் எத்தனை . சங்கடங்கள் , சந்தேகங்கள் , வெறுப்புகள் , துரோகங்கள் , விரோதங்கள் என்று எத்தனை பரிமாணங்களில் ஒரு உள்ளம் பயணிக்கவேண்டி இருக்கிறது . இத்தனைக்கும் கையில் கிடைக்கும் 1000 ருபாய் தாளினை இரண்டு நாட்களுக்கு மேல் பயன்படுத்த முடியாதது இன்றைய காலகட்டத்தின் துர்ப்பாக்கியநிலை தான் . நாளுக்கு நாள் ஓய்விற்கும் சராசரி மனிதனிற்குமான தொடர்பும் அற்றவ

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்லவும்