தாய்த்தமிழே!!! உலகில் முதல் மாந்தன் எப்போது தோற்றம் பெற்றானோ அப்போதே மொழியின் தோற்றமும் ஆரம்பித்திருக்கவேண்டும். உலகில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் மாந்தனின் பிரவேசம் ஆரம்பிக்க மொழிகளின் பிரவேசமும் உதயமானது. ஆனால் இவ்வாறு தோன்றிய மொழிகள் அனைத்தும் ஒரே மாதிரியான ஒலியமைப்புக்களை பயன்படுத்தவில்லை. ஒரு மொழியானது எவ்வாறு தோற்றம் பெறுகிறது பெரும்பாலும் ஒரே விதமான அமைப்புகளை மாந்தர்கள் தம்மிடத்தில் கொண்டிருக்கையில் மொழிகள் மாத்திரம் ஏன் பலவகையாக வேறுபட்டு காணப்படுகிறது, மொழிகளுக்கிடையான வேறுபாடுகளின் அடிப்படை என்ன என்பது பற்றி நாங்கள் அறிந்திருக்க கடமைப்பட்டவர்கள் ஆகிறோம். பொதுவான ஒலிகள் மொழிகளுக்கிடையில் இருந்தாலும் ஒவ்வொரு மொழிக்குடும்பத்திற்கென்றும் தனித்துவமான ஒலிகளும் ஏராளமாக காணப்படுகிறது. ஒரு மொழியானது எந்த வகையில் தோற்றம் பெறுகிறது என்பது அந்த மொழியினைப்பயன்படுத்துபவர்கள் வாழும் சூழல் அத்துடன் அந்தச்சூழலில் வாழ்ந்த விலங்குகள், பறவைகள் என்று அனைத்துவிதமான உயிரினங்களும் ஏற்படுத்தும் ஒலிகளே மொழியில் காணப்படும் ஒலிகளுக்கு அடிப்படையாயின. இவ்வாறு ஒவ்வொரு பிரதேசமும் தாம் இனங்கண்ட ஒலிகளின...