சமூகமும் மனிதனும் ஆறறிவு கொண்டு அற்புத படைப்பான பூமி தனில் வலம் வரும் மனிதன் தனது ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு மூலம் அதனை பயன்படுத்தும் தன்மையைப்பொறுத்து அவன் சமூகத்தில் இடம்பிடிக்கம் நிலையானது மாற்றமடைந்து செல்கிறது. ஒரு மனிதனின் உன்னத நிலையானது கோபம் பொறாமை விரோதம் துரோகம்சந்தேகம் அலட்சியப்போக்கு தற்பெருமை புரிந்துணர்வின்மை சகிப்புத்தன்மை அற்ற நிலை போன்ற காரணிகளால் தகர்க்கப்பட்டு மிகவும் கீழ்த்தரமான நிலையை அடைகிறான். அவன் பல்வேறு பிரச்சினைகளுள் சிக்குவது மட்டுமல்லாது பல்வேறு பிரச்சினைகளின் தோற்றத்திற்கும் விதையாகிறான். இவ்வாறான நிலையில் மேற்குறிப்பிட்ட பண்புகளை கொண்ட மனிதன் ஒருவன் தன் கல்வி மூலம் உயர்ந்த நிலையினை அடையும் போது அவன் வாழும் சமூகத்தின் சமநிலை கெடுகிறது. அநீதிகள் அரங்கேற காரணமாகிறது. இதுவே பல்வேறு பிரச்சினைகளின் ஆணிவேராக அமைகிறது. ஆரம்பத்தில் சமூக பிரச்சினையாக தோற்றம் பெறுவது இவ்வாறான பல்வேறு மனிதர்களின் பிரவேசத்தால் தீவளாவிய பிரச்சினையாகவோ அல்லது சர்வதேச பிரச்சினையாகவோ உருவெடுக்கின்றன. அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் நீர்ப்பிரச்சினையில் இருந்து உலகை உலுக்கும் தீவிரவாதம் வர...