அனைவருக்கும் வணக்கங்கள்... இந்தப்பதிப்பின் ஊடாக சுலபமான வழிகளின் ஊடாக அதிக தடவைகள் சில தகவல்களை எவ்வாறு Print பண்ணலாம் என நோக்குவோம். குறிப்பாக Print "Hello" என்ற குறியீடு பிரதான திரையில் ஒரு முறை “Hello" எனும் வாசகத்தை அச்சிடுகிறது. மேற்படி “Hello” எனும் வாசகம் பிரதான திரையில் 10 தடவைகள் அச்சிடப்பட வேண்டும் எனில் Print "Hello" எனும் குறியீட்டினை ஒன்றன் கீழ் ஒன்றாக 10 தடவைகள் தட்டச்சு செய்து பெற முடியும். இவ்வாறு ஒரே வகையில் கையாளக்கூடிய தகவல்களை மீண்டும் மீண்டும் குறியீடுகளை தட்டச்சு செய்வதன் மூலம் பெறுவதை விடுத்து சில அடிப்படை கணித அறிவினை இங்கு புகுத்துவதன் மூலம் இவ்வாறான செயல்களை இலகுவாக செய்திடலாம். அதாவது மீண்டும் மீண்டும் ஒரே வகையான செயலினை செய்வதை தான் Loop என்கிறோம். மேற்படி “Hello” வாசகத்தினை பத்து தடவைகள் Print "Hello" என்று தட்டச்சு செய்யாமல் வேறு எந்த வழியில் இலகுவாக பிரதான திரையில் பதியச்செய்யலாம் என்று நோக்குவோம். மீண்டும் மீண்டும் Print "Hello" என்று தட்டச்சு செய்யாமல் இங்கு 5 வரிகளுக்குள்ள...